• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுதந்திரமான நிறுவனமொன்றாக இலங்கை தகவல் தொழினுட்ப நிறுவகம் வழிப்படுத்தப்படுதல்
- மகாபொல நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் மூலம் வழங்கப்பட்ட நிதியமொன்றின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட, மாலபேயில் அமைந்துள்ள இலங்கை தகவல் தொழினுட்ப நிறுவகமானது தற்போது வரை தொழினுட்பவியல், வியாபாரம் மற்றும் பொறியியல் துறைகளில் பட்டங்களை வழங்கும் முன்னணி கல்வி நிறுவகமொன்றாகும். தற்போது, கிட்டதட்ட 7,000 மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதுடன் இந்த நிறுவகமானது கடந்த காலத்தில் சுமார் 9,000 பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவகத்தை முதலீட்டாளர்களை கவர்வதன் மூலமும் வௌிநாட்டு உயர் கல்வி நிறுவகங்களுடன் இணைக்கப்பட்டும் மேலும் அபிவிருத்தி செய்யப்படவேண்டியுள்ளது. மகாபொல நம்பிக்கை பொறுப்பு நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளது என்னும் விடயத்தை கவனத்திற் கொண்டு, எதிர்காலத்தில் சுதந்திரமான பட்டம் வழங்கும் உயர் கல்வி நிறுவகமொன்றாக தொடர்வதற்கென இந்த நிறுவகத்திற்குத் தேவையான ஏற்பாட்டினைச் செய்யும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.