• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹெத ஓயா நீர்வழங்கல் கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல்
- லஹூகல, பொத்துவில், பானம மற்றும் சியம்பலந்துவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கும் மற்றும் பொத்துவில் மற்றும் பானம சுற்றுலா வலயங்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கான பிரதான நீர்வழங்கல் மூலமாகவுள்ள ஹெதஓயாவின் தற்போதைய நீரோட்டமானது குடிநீருக்கான கேள்வியினைப் பூர்த்தி செய்வதற்கு பற்றாக்குறையாகவுள்ளது. ஹெதஓயாவிற்கு குறுக்கே அணைக்கட்டொன்றை கட்டுவதன் மூலம் நீர்த்தேக்கமொன்றை நிருமாணிப்பதற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரம் அமைச்சரவையினால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த கருத்திட்டத்துடன் ஒருங்கிசைவாக, ஹெதஓயா நீர்வழங்கல் கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கென 'Swiss Challenge' பெறுகை நடைமுறையினைப் பின்பற்றி பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.