• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முதலீட்டு மேம்பாடு மற்றும் பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு சார்பில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுதல்
- முதலீட்டு மேம்பாடு மற்றும் பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்குடன் 2016‑04‑07 ஆம் திகதியன்று சீன மக்கள் குடியரசின் வாணிப அமைச்சிற்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஆதலால், மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் இனங்காணப்பட்ட முன்னுரிமை வாய்ந்த கருத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான கட்டமைப்பு உடன்படிக்கையிலும் நடுத்தர மற்றும் நீண்டகால அபிவிருத்தித் திட்டப் பொழிப்பிலும் கைச்சாத்திடும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது: