• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் டொப்லர் வானிலை ராடர் வலையமைப்பொன்றைத் தாபித்தல்
- பேரிடர் சார்ந்த வளிமண்டலவியல் நிகழ்வுகளை கண்டறிவதற்கும் மக்களுக்கு துல்லியமான எதிர்வுகூறல்களை மேற்கொள்வதற்கு ஏதுவாகவும் இலங்கையில் டொப்லர் வானிலை ராடர் வலையமைப்பொன்றைத் தாபிப்பதற்காக யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மைக்கு ஊடாக 2,503 மில்லியன் யப்பான் யென் (அண்ணளவாக 3,422 மில்லியன் ரூபா) கொண்ட மானிய உதவியொன்றை வழங்குவதற்கு யப்பான் அரசாங்கம் இணங்கியுள்ளது. ஆதலால், பரிமாற்று பத்திரங்களில் கைச்சாத்திடும் பொருட்டும் யப்பான் அரசாங்கத்துடன் மானிய உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடும் பொருட்டும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.