• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக பொருத்து வீடுகளை நிருமாணித்தல்
- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த குடும்பங்களுக்காக வீடுகளை வழங்கும் குறிக்கோளுடன் நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள பொருத்து வீடுகளுக்கான கருத்திட்டத்தை மீள் மதிப்பிடும் பொருட்டு நியமிக்கப்பட்ட விசேட கடமைப்பொறுப்புக்கள் அமைச்சரான (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களின் சிபாரிசின் அடிப்படையில், பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவானது 1.5 மில்லியன் ரூபா கொண்ட செலவில் முதலில் 6,000 வீடுகளை நிருமாணிப்பதற்கு சிபாரிசு செய்துள்ளது. அதற்கிணங்க, 6,000 பொருத்து வீடுகளை நிருமாணிக்கும் பொருட்டும் இடம்பெயர்ந்த குடும்பங்களின் கோரிக்கைக்கு இணங்கவும் அவர்களின் சம்மதத்தின் பேரிலும் இந்த நோக்கத்திற்காக கட்டப்பட்ட வீடுகளை வழங்கும் பொருட்டும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த குடும்பங்கள் சார்பில் செங்கல் மற்றும் சீமெந்து பாவனையுடன் நிருமாணிக்கப்படுவதற்கு பிரேரிக்கப்பட்ட 59,000 வீடுகளின் நிருமாண முறை சார்பில் சிபாரிசுகளை மேற்கொள்ளும் பொருட்டு உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.