• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் மருத்துவ அலுவலர் குழாத்துக்கு நிலசெவன வீடமைப்புத் திட்டத்திலிருந்து உத்தியோகபூர்வ இல்லங்களை குறித்தொதுக்கிக் கொள்ளல்
- கிட்டத்தட்ட 120 மருத்துவ நிபுணர்களும் 570 மருத்துவ உத்தியோகத்தர்களும் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சேவையாற்றி வருவதுடன் அவர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான பற்றாக்குறையானது தீவிர பிரச்சினையொன்றாக மாறியுள்ளது. மருத்துவ உத்தியோகத்தர்களின் ஏற்கனவேயுள்ள கிட்டதட்ட 15 விடுதிகளானவை வைத்தியசாலையின் பிரேரிக்கப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் கருதி உடனடியாக அகற்றப்பட வேண்டியுள்ளதனால் இது குறித்து துரிதமான நிகழ்ச்சித்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 38.7 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவில் கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் சார்பில் காலியில் வெகுனகொட 'நிலசெவன' வீடமைப்புத் திட்டத்திலிருந்து பத்து (10) வீடுகளை கொள்வனவு செய்யும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.