• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கப்பல் முகவர்களுக்கு, கப்பற் சரக்குகளைக் கொண்டு செல்பவர்களுக்கு, இயந்திர இயக்குநர்கள் அல்லாத பொது தொழிற்பாட்டாளர்களுக்கு, கொள்கலன் தொழி்ற்பாட்டாளர்களுக்கு உரிமப்பத்திரம் வழங்கும் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
- இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்களை பாதுகாப்பதற்கும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரி ஏய்ப்பிற்கூடாக தேசிய பொருளாதாரம் மீதான பாதகமான தாக்கங்களை தவிர்ப்பதற்குமென முனைவிட கையாள்கை கட்டண விதிப்பையும் மற்றும் கப்பல் பொருள் நகர்த்தலுக்கான சருவதேச ரீதியில் சிபாரிசு செய்யப்பட்ட கப்பல் கேள்வு கட்டணங்களுக்கு மேலதிகமான ஏனைய கட்டணங்களையும் தடை செய்யும் பொருட்டு 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கப்பல் முகவர்களுக்கு, கப்பற் சரக்குகளைக் கொண்டு செல்பவர்களுக்கு, இயந்திர இயக்குநர்கள் அல்லாத பொது தொழிற்பாட்டாளர்களுக்கு, கொள்கலன் தொழி்ற்பாட்டாளர்களுக்கு உரிமப்பத்திரம் வழங்கும் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளானவை 2013‑12‑27 ஆம் திகதியிடப்பட்ட 1842/16 ஆம் இலக்கமிடப்பட்ட அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்த ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக சில தரப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகளையும் செய்யப்பட்ட பிரேரிப்புகளையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, உரிய சட்டத்தினை திருத்துவதற்கான அங்கீகாரம் அமைச்சரபையினால் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தயாரிக்கப்பட்ட திருத்த சட்டத்தினை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கும் பொருட்டும் அதன்பின்னர் அங்கீகாரம் பெறும் பொருட்டு அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.