• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீதித்துறை சட்டத்தைத் திருத்துதல் (மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 85 வரை அதிகரித்தல்)
- இந்த நாட்டின் நீதிமன்றங்களில் நிலுவையாக பெருமளவு வழக்குகள் தீர்க்கப்படாது காணப்படுகின்ற படியால், அவற்றை இல்லாமல் செய்வதற்கு பொருத்தமான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உள்ளவாறு, சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களில் நிலுவையாக உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5749 ஆக இருந்ததுடன் வர்த்தக மேல் நீதிமன்றங்களில் இது 5580 ஆக இருந்ததுடன் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உள்ளவாறு, மேல் நீதிமன்றங்களில் நிலுவையாக உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 16,574 ஆக இருந்ததுடன் இத்தகைய வழக்குகளைத் தீர்க்கும் பொருட்டு தற்போது நீதிமன்றங்களில் சேவையாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை 75 மாத்திரமே ஆகும். ஆதலால், தற்போது நிலுவையாகவுள்ள வழக்குகளை துரிதப்படுத்தும் பொருட்டு 75 மேல் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட தற்போதைய அங்கீகரிக்கப்பட்ட பதவியணியை 85 வரையில் அதிகரிப்பதற்கு ஏதுவாக நீதித்துறை சட்டத்திற்கான திருத்தங்களை செய்யுமாறு சட்டவரைநரை அறிவுறுத்தும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.