• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தற்போது துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சில நீர்ப்பாசனக் கருத்திட்டங்களின் வேலையைப் பூர்த்தி செய்தல்
- மினிப்பே இடதுகரை புனர்நிருமாணம், கித்துல் நீர்த்தேக்க மற்றும் ருகம் நீர்த்தேக்கக் கருத்திட்டங்கள், கும்புக்கன்ஓயா நிர்த்தேக்கக் கருத்திட்டம் மற்றும் மன்னார் தாராபுரம் குளக் கருத்திட்டங்கள் சார்பில் 2017 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் 600 மில்லியன் ரூபா கொண்ட தொகையொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. இவ் ஏற்பாடுகளில், பொது திறைசேரியானது 300 மில்லியன் ரூபா கொண்ட தொகையொன்றை ஏற்கனவே விடுவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி நிதியத்தின் கீழ் மகாவலி வீதிப்பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மினிப்பே இடதுகரையின் புனர்நிருமாணிப்பிற்காக நிதியங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளபடியாலும் கித்துல் நீர்த்தேக்க மற்றும் ருகம் நீர்த்தேக்கக் கருத்திட்டங்களுக்கு இந்த ஆண்டில் மேலதிக நிதியங்கள் தேவையில்லையென்றபடியாலும் வெல்லச நவோதயாக் கருத்திட்டத்தின் கீழ் மொனறாகலை மாவட்டத்தில் நிலத்தடி நீர் கண்காணிப்பு வலையமைப்பு தாபித்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிற்கான முன்னோடிக் கருத்திட்டமான தற்போது நடைபெற்றுவரும் கனகல்ல தென்ன நீர்த்தேக்க மற்றும் குருகல்ஓயா நீர்த்தேக்க கருத்திட்டத்தின் வேலையை பூர்த்தி செய்வதற்கென 300 மில்லியன் ரூபா கொண்ட எஞ்சிய நிதி ஏற்பாட்டை பயன்படுத்தும் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.