• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 ஆம் ஆண்டில் வெள்ளப்பெருக்கு தடுப்பு கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- 2010 ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் கொழும்பு நகரத்தில் ஏற்பட்ட கடும்மழை காரணமாக எழுந்த வௌ்ளப்பெருக்கு நிலைமையின் பின்னர், வெள்ளப்பெருக்கு தடுப்பு கருத்திட்டங்களை கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பிரதேசங்களுக்குள் நடைமுறைப்படுத்துவதற்கான பெருமளவு முயற்சிகளை இலங்கை நிலமீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மேற்கொண்டிருந்தது. அதற்கிணங்க, 2016 ஆம் ஆண்டில் 3,500 மில்லியன் ரூபா தொகையொன்று வௌ்ளப் பெருக்குத் தடுப்புக் கருத்திட்டங்களுக்காக குறித்தொதுக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் 3,700 மில்லியன் ரூபா கொண்ட மதிப்பிடப்பட்ட செலவின் கீழ் நீரிறைப்பு (பம்பி) நிலையங்களின் நிருமாணம், ஈரநிலப் பாதுகாப்பு, வௌ்ளப்பெருக்குத் தொடர்பான ஆய்வுகள் என்பன நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், இக் கருத்திட்டங்களில் சில ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க தற்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் வௌ்ளப்பெருக்குக் கட்டுப்பாட்டுக் கருத்திட்டங்களை முன்னெடுக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு கொள்கை விடயமொன்றாக அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.