• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டமூலம்
- 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டப் பிரேரிப்பிற்கிணங்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தினை நவீன போக்குகளுடன் அதனை எளிமைப்படுத்தி இசைவாக்கி மீள வரைவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க, சட்டவரைநரினால் வரையப்பட்ட புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரம் பெறும் பொருட்டு பாராளுமன்றத்தில் அதனை சமர்ப்பிக்கும் பொருட்டும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.