• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மத்திய வங்கியின் 2016 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- இலங்கைப் பொருளாதார நிலை, மத்திய வங்கியின் கணக்குகள், முன்னைய ஆண்டில் பின்பற்றப்பட்ட நிருவாக நடவடிக்கைகள், அங்கீகரிக்கப்பட்ட முக்கியமான சட்டமூலங்கள் மற்றும் தரவுகள் ஆகியவற்றை உள்ளடக்கும் நாணய சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க தயாரிக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.