• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாடசாலைகளுக்கான நடமாடும் விஞ்ஞானகூட உபகரண பொதிகளை கொள்வனவு செய்தல்
- விஞ்ஞான கல்வியினை மேம்படுத்தும் குறிக்கோளுடன் க.பொ.த(சா/த) வரையில் வகுப்புகளை நடாத்துவதும் ஆய்வுகூடங்களை கொண்டிராததுமான 3,000 பாடசாலைகளுக்கான நடமாடும் ஆய்வுகூட உபகரண பொதிகளை வழங்குவதற்கு 2016 ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தினால் பிரேரிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பொருத்தமான வழங்குநர்களை தெரிவுசெய்யும் பொருட்டு போட்டி விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளுக்குகிணங்க நடமாடும் ஆய்வுகூட உபகரண பொதிகளை வழங்குவதற்காக ஒப்பந்தத்தினை கையளிக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.