• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொறட்டுவை, ஊவா வெல்லஸ்ஸ மற்றும் ஆற்றுகைக்கலை ஆகிய பல்கலைக்கழகங்களில் நிருமாணிக்கப்படவுள்ள கட்டடங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளின் பேரில், மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் ஆடை மற்றும் துணிசார் தொழினுட்ப திணைக்களத்திற்கான கட்டட விரிவாக்கம் ஒன்றின் நிருமாணிப்பு, தொழினுட்ப பிரிவின் கீழ் பட்ட நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துவதற்கான ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் கட்புல, ஆற்றுகைக்கலைகள் பல்கலைக்கழகத்தின் அழகியல் மற்றும் பொது பொழுதுபோக்குகள் பீடத்திற்கான கட்டடத்தொகுதியொன்றின் நிருமாணம் சார்பில் இந்த ஒப்பந்தத்தினை கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.