• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வதேச உடன்படிக்கைகளுக்காக இலத்திரனியல் தொடர்பாடல் மீதான ஐக்கிய நாடுகள் சமவாயத்தை அங்கீகரித்தல் - 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டத்தை திருத்துதல்
- இலங்கையில் சருவதேச உடன்படிக்கைகளில் இலத்திரனியல் தொடர்பாடல் பாவனை குறித்து ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் சார்பில் வழங்கப்படும் ஏற்பாடுகளுக்கு செயல்வலுவினைக் கொடுப்பதற்கென, அமைச்சரவையினால் வழங்கப்பட்ட அங்கீகாரத்திற்கிணங்க சட்டவரைநரினால் வரையப்பட்ட 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க திருத்தப்பட்ட இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கும் பொருட்டும் அதன் பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.