• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தை தரமுயர்த்துதல்
- பெருந்தோட்டத்துறையில் இளையோர்களின் திறன்கள் மற்றும் வாழ்க்கைத் தொழில் ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்குடன் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தை தரமுயர்த்தும் பொருட்டு 199 மில்லியன் ரூபா கொண்ட மானியமொன்றை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது. இது குறித்து புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் யூ.பழனி திகம்பரம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.