• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
“புதுபுத் மாப்பிய உபகார” வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம்
- சமய குருநிலையை அடைந்துள்ள பௌத்த பிக்குகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சார்பில் வீடுகளை கட்டுவதற்கென இலங்கையில் நடாத்தப் படவுள்ள 2017 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் வெசாக் வைபவங்களுடன் ஒருங்கிசையும் பொருட்டு புதுபுத் மாப்பிய உபகார வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் எனப் பெயரிடப்பட்ட கருத்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அத்தகைய 500 பயனாளி குடும்பங்கள் சார்பில் நாடளாவிய ரீதியில் 500 வீடுகளை நிர்மாணிக்கும் பொருட்டு 500 சதுரஅடி தரைப் பரப்பளவு கொண்ட வீடொன்றிற்கு உச்சபட்சம் 500,000 ரூபாவிற்கு உட்பட்டு நிதியுதவியினை வழங்குவதற்கு அவசியமான காணிகளை இனங்கண்டு, புத்த அலுவல்கள் திணைக்களம் மற்றும் பிரதேசிய சாசனாரக்‌ஷக பல மண்டல ஆகியவற்றின் சிபாரிசுகளுக்கிணங்க பெறுநர் குடும்பங்களை இனங்காண்பதற்கென வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினாலும் புத்தசாசன அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.