• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சூரியபல சங்கிராமய” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அரசாங்க நிறுவனங்களுக்கு சூரியசக்தி முறைமைகளை வழங்கும் கருத்திட்டம்
- அரசாங்க நிறுவனங்கள் அமைந்துள்ள கட்டடங்களை பசுமை வலுசக்தி மூலங்களாக நிலைமாற்றும் பொருட்டு 2017 ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டப் பிரேரிப்புகளில் 300 மில்லியன் ரூபா தொகையொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ், இந்த நிதியங்களின் 75 சதவீதத்தினைப் பயன்படுத்தி சகல மாவட்டங்களிலுமுள்ள தெரிவுசெய்யப்பட்ட அரசாங்க வைத்தியசாலைகளில் சூரியசக்தி பலகங்களை நிறுவும் பொருட்டும் மீதி 25 சதவீதத்தினைப் பயன்படுத்தி தெரிவுசெய்யப்பட்ட அரசாங்க நிறுவனங்களில் செலவு விநியோக அடிப்படையின் கீழ் சூரியசக்தி பலகங்களை நிறுவும் பொருட்டும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.