• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேயிலையிலுள்ள கூறுகளை விரைவாக பரிசோதனை செய்வதற்கு யப்பான் தொழினுட்பத்தைப் பயன்படுத்தி பகுப்பாய்வுக் கருவிகளை அறிமுகப்படுத்து வதற்காக துல்லிய தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஆய்வொன்றை செய்தல்
- தேயிலையிலுள்ள கூறுகளை விரைவாக பரிசோதனை செய்வதற்கு யப்பான் தொழினுட்பத்தைப் பயன்படுத்தி பகுப்பாய்வுக் கருவிகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதற்கான அவற்றின் விருப்பினை யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையும் யப்பானின் Kawasaki Kiko Co, Ltd நிறுவனமும் வௌிப்படுத்தியுள்ளன. இந்த நோக்கத்திற்காக, அதன் துல்லியத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு ஏற்கனவே விருத்தி செய்யப்பட்டுள்ள பகுப்பாய்வுக் கருவியொன்றை பொருத்தமுடையதாக தரமுயர்த்துவதற்கென ஆய்வொன்று இலங்கையில் நடாத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவகம் மற்றும் இலங்கை தேயிலை சபை ஆகியன இலங்கையின் இணைந்த நிறுவனங்களாக தொழிற்படும். அதற்கிணங்க, மேற்கூறப்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.