• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மேல் மாகாணத்தினுள் மாநகர திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கான நீண்டகால தீர்வுகள்
- மேல்மாகாண பிராந்தியத்தின் நகர திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கான நீண்டகால தீர்வுகளை கண்டறியும் பணி மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சிற்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபையிடமும் குறித்தொதுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர அபிவிருத்தி திட்டம் மற்றும் கொழும்பு துறைமுக நிதி நகர கருத்திட்டம் ஆகியவற்றின் அமுலாக்கத்துடன் 2030 ஆம் ஆண்டளவில் நாளாந்தம் 1,300 மெட்ரிக் தொன் மேலதிக கழிவுகள் சேகரிக்கப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆதலால், நகர திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்ட பின்வரும் கருத்திட்டங்களையும் திட்டங்களையும் அமுல்படுத்துவதற்காக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* இராணுவத்தின் இணைப்புடன் 05 மாதங்களுக்குள் மீதொடமுல்ல நிலநிரப்பல் சம்பந்தமாக செய்யப்பட்டு வருகின்ற செயற்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் நகர வனப்பூங்காவொன்றாக அந்த இடத்தை அபிவிருத்தி செய்வதற்கும்.

* ஆரம்ப சுற்றாடல் மதிப்பீட்டு நடைமுறையினை பின்பற்றி, சகல தொடர்ந்து செல்லும் மற்றும் எதிர்கால கழிவுச் செய்முறையின் சுற்றாடல் அங்கீகாரத்தை வழங்குவதற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் அதிகாரத்தை உரித்தளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும்.

* கழிவினைப் பாகுபடுத்துவதற்கு மாத்திரம் பொதுமக்களைத் தூண்டுவதற்கும் அத்தகைய நோக்கங்களுக்காக குறித்தொதுக்கப்பட்ட நிலையங்களுக்கு அத்தகைய கழிவு மாத்திரம் கொண்டு செல்லப்படுவதற்கும்.

* 50,000 இற்கு கூடுதலான குடும்பங்களை கொண்டுள்ள உள்ளூர் அதிகாரசபைகளை, அவற்றிற்குச் சொந்தமாக கழிவகற்றல் மற்றும் செய்முறைப்படுத்தும் நிலையங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்பு விடுப்பதற்கும்.

* மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சானது Lanka Transformers Limited நிறுவனத்துடன் இணைந்து கழிவினை வலுசக்தியாக்கும் கருத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கும்.

* புத்தளத்திலுள்ள அருக்கரு கழிவகற்றல் கருத்திட்டம் சார்பில் இலங்கையில் வௌிநாட்டு தூதரகங்களுக்கூடாக வௌிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து கருத்திட்ட பிரேரிப்புகளுக்காக கோரிக்கை இடுவதற்கும்.

* களனியில் கழிவு இடமாற்ற நிலையமொன்றின் நிருமாணிப்பிற்காக தேவைப்படும் இலங்கை நிலமீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணித்துண்டொன்றை மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சிற்கு கைமாற்றுவதற்கும்.