• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உயர் தொழினுட்ப உற்பத்தித்திறனை மேம்படுத்தும் தன்னியக்க இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதியின் போது நிதி சலுகைகளை வழங்குதல் தொடர்பான சிபாரிசுகள்
- ஏதேனும் தொழில்முயற்சி ஒன்றில் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் இயந்திர சாதனத்தை இறக்குமதி செய்யும் போது உயர் தொழினுட்ப தன்னியக்க இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதி தொடர்பில் துறைமுகம் மற்றும் விமான சேவை விதிப்பனவு மீது 75 சதவீதமான கைவிடல் கொண்ட நிதி ஊக்குவிப்பினை 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்பானது வழங்கியுள்ளது. அரசாங்கத்தினால் வழங்கப்படும் இந்த ஊக்குவிப்பிற்கு உரித்தளிக்கப்படுவதற்கு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதற்கிணங்க, கூறப்பட்ட ஊக்குவிப்பு விண்ணப்பத்தினை ஆராய்ந்து சிபாரிசினை வழங்குவதற்கென கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் தலைமைத்துவத்தின் கீழ் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.