• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமுத்திர பல்கலைக் கழகத்தின் பாணந்துறை பிராந்திய நிலையத்திற்காக நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிருமாணித்தல்
- இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் 08 பிராந்திய நிலையங்களானவை மட்டக்குளிய, களுத்துறை, காலி, தங்காலை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ளதுடன் மீன்பிடி மற்றும் கடல்சார்ந்த துறைகளில் அதிக கேள்வியினை கொண்டுள்ள தேசிய வாழ்க்கைத் தொழில் தகைமைகள் (NVQ) மட்டம் 5 மற்றும் 6 ஆகியவற்றிலான டிப்ளோமா கற்கை நெறிகளையும் உயர் டிப்ளோமா கற்கை நெறிகளையும் இந்த நிலையங்கள் நடாத்துகின்றன. தற்போது, கடல்சார் தொடர்பாடல், சுழியோடுதல், நீரடி உருக்கியொட்டு வேலை மற்றும் படகு கட்டுதல் ஆகிய துறைகளில் திறன்மிக்க மனித வலுவிற்காகவும் உயர்ந்த கேள்வி காணப்படுகின்றது. எனினும், களுத்துறை மாவட்டத்திலுள்ள தெடியவலவில் நடாத்தப்படும் பயிற்சி நிலையத்தின் இயலளவினை மேலும் விஸ்தரிக்கும் சாத்தியப்பாடு எதுவும் காணப்படவில்லை. அத்துடன் பாணந்துறையின் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள உயன்கலே கிராம சேவையாளர் பிரிவில் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சிற்குச் சொந்தமான காணித்துண்டொன்றில் சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் புதிய பிராந்திய பயிற்சி நிலையமொன்றை நிருமாணிப்பதற்கும் அந்த நிலையத்திற்குத் தேவையான உபகரணம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.