• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய வைத்தியசாலையில் தீவிர சத்திர சிகிச்சைப் பிரிவுடன் கூடிய சிறுநீரக சிகிச்சைப் பிரிவொன்றை தாபித்தல்
- பேறு - சிறுநீர் தொடர்பான உறுப்புக்கள் சார்ந்த சத்திர சிகிச்சைப் பிரிவானது 1955 ஆம் ஆண்டில் இலங்கையில் தேசிய வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டதுடன் சிறுநீரகக் கற்கள், வலுவிழந்த சுரப்பிகள், பேறு - சிறுநீர் தொடர்பான உறுப்புக்கள் சார்ந்த புற்றுநோய், பெண் சிறுநீர் குழாய் பிரச்சினைகள் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சத்திர சிகிச்சை சார்ந்த நோய்களை உள்ளடக்கிய பல்வேறு வகைப்பட்ட சத்திர சிகிச்சை நிலைகளுக்கான சிகிச்சையினையும் வழங்குகின்றது. மாளிகாவத்தையில் சிறுநீரக உறுப்பு மாற்றத்திற்கான அலகினை தாபிப்பதற்கு முன்னர், இந்த பிரிவானது அதேபோன்று சிறுநீரக உறுப்பு மாற்றுகையிலும் ஈடுபடுத்தப்பட்டது. தற்போது, நீண்ட தொடர்காலத்திற்கு புனரமைக்கப்படாமல் இருந்த பாழடைந்த கட்டடமொன்றில் இந்த பிரிவு தொழிற்பட்டு வருகின்றதென்பதுடன் ஆதலால் இது அவசியமான வசதிகளுடன் கூடிய வேறொரு கட்டடத்தில் துரிதமாக இடநகர்த்தப்படல் வேண்டும். இந்த நோக்கத்திற்காக, Ms.E.A.M.Maliban Textiles (Pvt) Ltd. நிறுவனமானது தற்போதய கட்டடத்தை இடித்தழிப்பதற்கும் 150 மில்லியன் ரூபாய் தொகை கொண்ட மதிப்பிடப்பட்ட செலவில் புதிய மூன்று மாடிக் கட்டடத்தை நிருமாணிப்பதற்கும் அதன் விருப்பத்தை வௌிப்படுத்தியுள்ளது. அதற்கிணங்க, 80 - 100 வரையான படுக்கைகளைக் கொண்ட ஆற்றலுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவொன்றை உள்ளடக்கிய நவீன கட்டடத்தை நிருமாணிப்பதற்கு அனுசரணை வழங்கும் நிறுவனத்திற்கும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.