• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் நீர் சேவைகள் தொழிற்துறைக்கான ஒழுங்குவிதிகள்
- நுகர்வோர்களின் அக்கறையினைப் பாதுகாப்பதற்கும் நீர் சேவைகள் தொழிற்துறைக்கு கூடுதல் முதலீட்டினைக் கவருவதற்கும் பயனுறுதிவாய்ந்த ஒழுங்குவிதியொன்று அவசியமானதென்பது அவதானிக்கப்பட்டுள்ளது. தற்போது, இலங்கையின் பொது பயன்பாட்டு சேவை ஆணைக்குழுவிற்கு நீர் சேவைகள் தொழிற்துறை தொடர்பான பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒழுங்குவிதிகள் உரித்தளிக்கப்பட்டுள்ளதென்பதுடன், மாகாணசபை நிறுவனங்கள் மூலமும் சமுதாயம்சார் அமைப்புக்கள் மூலமும் வழங்கப்படும் நீர் சேவைகளானவை இந்த ஆணைக்குழுவின் விடயநோக்கெல்லையின் கீழ்வருவதில்லை. ஆதலால், நீர் சேவை தொழிற்துறையை ஒழுங்குமுறைப்படுத்தும் குறிக்கோளுடன்,தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினை 'செயற்படுத்துநராக' இருக்குமாறும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை 'ஒழுங்குபடுத்துநராக' இருக்குமாறும் அதிகாரமளிப்பதன் மூலம் இலங்கையில் நீர் சேவைகள் தொழிற்துறைக்கான கொள்கைச் சட்டகமொன்றை வகுத்தமைக்கும் பொருட்டும் அத்தகைய ஏற்பாட்டினை வழங்குவதை இலக்காகக் கொண்டு, நீர் சேவைகள் தொழிற்துறை சட்டமூலத்தை வரையுமாறு சட்டவரைநருக்கு அறிவுறுத்தும் பொருட்டும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.