• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய வீதிப் பாதுகாப்பு ஆணைக்குழுவைத் தாபித்தல்
- தற்போது, வீதிவிபத்துக்கள் காரணமாக ஏற்படும் உயிர் இழப்புக்களையும் சொத்துக்களுக்கான சேதத்தினையும் குறைப்பதே இலங்கை எதிர்கொள்ளும் பிரதான சவால்களில் ஒன்றாகும். இச் சூழ்நிலையினைக் கையாள்வதற்கு இருக்கக்கூடிய ஒரேயொரு நிறுவனம் மோட்டார் வாகனப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் தாபிக்கப்பட்ட தேசிய வீதிப் பாதுகாப்பு ஆணைக்குழுவேயாகும். எனினும், வீதிப் பாதுகாப்பின் சிக்கலான பிரச்சினையின் மீது கவனத்தினை செலுத்தும்போது, ஏனைய நாடுகளிலுள்ள பரந்துபட்ட அனுபவங்களுடன் வௌிப்படையாக காட்டப்பட்டுள்ளவாறு உரிய பொறுப்புக்களுடனும் அதிகாரத்துடனும் கூடிய ஆணைக்குழுவொன்றின் தாபிப்பானது கூடுதல் பொருத்தமுடையதாகுமென்பது வௌிப்படையாகும். ஆதலால், தேசிய வீதிப் பாதுகாப்பு ஆணைக்குழுவொன்றைத் தாபிக்கும் பொருட்டு 2010 ஆம் ஆண்டில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் அத்தகைய ஆணைக்குழுவை நியமிப்பதற்கு அவசியமான நடவடிக்கையை முன்னேடுப்பதற்கு இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. ஆதலால், நாளாந்தம் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை குறைக்கும் பொறிமுறையொன்றை செயற்படுத்துவதற்கான அதிகாரத்துடன்கூடிய புதிய அரசாங்க நிறுவனமொன்றாக "தேசிய வீதிப் பாதுகாப்பு ஆணைக்குழு" ஒன்றைத் தாபிப்பதற்கும், தரமிக்க சாரதிகள் சேவைகளுக்கான பொருத்தமான முறைமையொன்றை மேற்கொள்வதற்கும் மற்றும் இந்த நோக்கத்திற்குத் தேவையான தகவல் சேகரிப்பு குறித்தான அறிவினைப் பகிர்ந்து கொள்வதற்கும் மற்றும் அக்குறிக்கோளுடன் வரைவுச் சட்டமூலமொன்றை தயாரிக்கும் பொருட்டு உரிய துறையிலுள்ள பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்குமென போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.