• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசுமை வலுசக்தி அபிவிருத்தி மற்றும் மின்சக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - இரண்டாம் கட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக அபிவிருத்திக்கான பிரான்ஸ் முகவராண்மையிடமிருந்து நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளல்
- ஊடுகடத்துகை உட்கட்டமைப்பு மேம்பாடு, நடுத்தர வோல்ற்று வலையமைப்பின் வினைத்திறன் மேம்பாடு மற்றும் மின்சக்தி வினைத்திறனுக்காக கேள்விப்பக்க முகாமைத்துவ மேம்பாடு என பெயர்கொண்ட மூன்று (03) கருத்திட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்ட பசுமை வலுசக்தி அபிவிருத்தி மற்றும் மின்சக்தி வினைத்திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் - இரண்டாம் கட்டத்திற்குத் தேவைப்படும் 250 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் தொகை கொண்ட மொத்த செலவின் ஒருபகுதியினைப் பூர்த்தி செய்யும் பொருட்டு 30 மில்லியன் யூரோவினை வழங்குவதற்கான அதன் விருப்பத்தினை அபிவிருத்திக்கான பிரான்ஸ் முகவராண்மை வௌிப்படுத்தியுள்ளது. அதற்கிணங்க, மேற்போந்த கடன்தொகையினைப் பெற்றுக் கொள்வதற்கு மேற்போந்த முகவராண்மையுடன் உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.