• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை
- நாட்டின் சகல மக்களுக்கிடையேயும் தேசிய ஒற்றுமையையும் அமைதியான சகவாழ்வையும் ஏற்படுத்தும் பகிரப்படும் எதிர்காலமொன்றை உருவாக்கும் குறிக்கோளுடன், உரிய சகல அக்கறைதாரர்களினது கருத்துக்களையும் இலங்கையின் சகல சமுதாயங்களுக்கும் மக்களுக்கும் சொல்லொணாத் துயரங்களை விளைவித்த மூன்று தசாப்தகாலம் நீடித்த தொடர்ச்சியான ஆயுதக் குழப்பமொன்றின் இயல்பினைக் கொண்டமைந்த குழப்பமொன்று மீண்டெழாமலிருப்பதை உறுதிப்படுத்துவதற்கான வழிகாட்டல் சட்டகமொன்றை வழங்குவதையும் கவனத்திற்கொண்டு, 'நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கையாக' நடைமுறைப்படுத்தப்படவுள்ள நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான அரசாங்க கொள்கையானது வகுத்தமைக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தேசிய கொள்கையாக வரையப்பட்ட மேற்போந்த கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சருமானவரினாலும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.