• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1956 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க வெடிப்பொருட்கள் சட்டத்தைத் திருத்துதல்
- தற்காலப் போக்குகளை இசைவாக்கும் பொருட்டு 1956 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க வெடிப்பொருட்கள் சட்டத்திற்கான திருத்தம் தொடர்பில் சிபாரிசுகளை செய்யும் பொருட்டு உரிய அக்கறைதாரர்களின் பிரதிநிதிகளுடன் சேர்த்து குழுவொன்று நியமிக் கப்பட்டுள்ளது. வெடிபொருட்களுக்கான அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலப்பகுதி குறித்து வெடிபொருட்கள் வழங்குநர்களுக்கு அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான ஏற்பாட்டின் திருத்தம் மற்றும் 'வெடிபொருட்கள் மேலதிக கட்டுப்பாட்டாளர்' ஒருவரின் நியமனம் ஆகியன உள்ளடங்கும் பல சிபாரிசுகளை இந்தக் குழுவானது பிரேரித்துள்ளது. ஆதலால், கூறப்பட்ட ஏற்பாட்டினை உள்ளடக்கி 1956 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க வெடிப்பொருட்கள் சட்டத்திற்கான திருத்தங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு அறிவுறுத்தும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.