• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பின்னவல யானைகள் சரணாலயத்திலும் மிருகக்காட்சி சாலைகளிலுமுள்ள யானைகளை தகைமையுடைய ஆட்களுக்கும் / நிறுவனங்களுக்கும் பெற்றுக் கொள்ளும் வசதிகளை ஏற்பாடு செய்தல்
- பின்னவல யானைகள் சரணாலயத்தின் 30 ஏக்கர் கொண்ட மொத்த பிரதேசத்தில் தற்போது 88 யானைகள் உள்ளதோடு இந்த வரையறுக்கப்பட்ட பிரதேசத்திற்குள் குறித்த 88 யானைகளை பராமரிப்பது கடினமான பணியாகவுள்ளது. இதற்கமைவாக குறித்த இந்த யானைகளின் குறிப்பிட்ட அளவொன்றை தகைமையுடைய ஆட்களுக்கோ அல்லது வணக்கஸ்தலங்களுக்கோ பெற்றுக் கொடுப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி பின்னவல யானைகள் சாணாலயத்திலுள்ள பழக்கப்பட்ட யானைகளின் ஒரு பகுதியை விதித்துரைக்கப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அமைச்சரவையினால் நியமனம் செய்யப்படும் குழுவொன்றினால் தெரிவு செய்யப்படும் ஆட்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கும் அதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி கட்டளைகளை வழங்குவதற்குமாக வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதேபோன்று தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களத்தின் கீழ் முகாமிக்கப்படும் யானைகள் சேர்மம் ஒன்றின் மூலம் பெரஹராக்கள் சார்பில் பழக்கப்படுத்திய யானைகளை வழங்குவதற்கும் பழக்கப்படுத்திய யானைகளின் பதிவினை முறைப்படுத்துதல் உட்பட பாதுகாப்பினை ஏற்பாடு செய்தல் சார்பில் கட்டளைகளை வௌியிடுவதற்குமான சிபாரிசுகளுக்கும் கூட அங்கீகாரம் வழங்கப்பட்டது.