• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு தேசிய நெடுஞ்சாலைகள் கருத்திட்டத்தின் I ஆம் கட்டத்தின் கீழ் ஒருகொடவத்த - அம்பத்தலே வீதியை அபிவிருத்தி செய்தல்
- சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்தினால் நிதியளிக்கப்படும் கொழும்பு தேசிய நெடுஞ்சாலைகள் கருத்திட்டத்தின் I ஆம் கட்டத்தின் கீழ் ஒருகொடவத்த - அம்பத்தலே (B435) வீதியின் 2.90 கிலோ மீற்றரிலிருந்து 4.20 கிலோ மீற்றர் வரையும் 5.44 கிலோ மீற்றரிலிருந்து 7.70 கிலோ மீற்றர் வரையிலுமான வீதிப் பகுதிகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் Komuthi-HCM Engineering JV நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.