• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீதொட்டமுல்ல குப்பை போடப்படும் பிரதேசத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்
- இந்த விடயம் சம்பந்தமாக அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமையில் உரிய அமைச்சர்களினதும் உத்தியோகத்தர்களினதும் பங்குபற்றுதலுடன் 2017 ஏப்ரல் மாதம் 16, 19, 21 ஆகிய திகதிகளில் நடத்தப்பட்ட கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பிரகாரம் அனர்த்தத்திற்கு உள்ளானமையினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கும் வேலைத்திட்டமொன்றை அரசாங்க செலவில் நடைமுறைப்படுத்துவதற்கும் அவதானம் மிக்க இடங்களில் இருந்து அப்புறப்படுத்தும் குடும்பம் ஒன்று சார்பில் மூன்று மாத காலங்கள் என்னும் உச்சத்திற்கு உட்பட்டு மாதமொன்றுக்கு 50,000/- ரூபா வீதம் வீட்டு வாடகைக் கொடுப்பனவொன்றை வழங்குவதற்கும் நிரந்தர வீடுகளுக்கு குடியிருக்கச் செல்லும் குடும்பங்களுக்கு போக்குவரத்து படியொன்றை வழங்குவதற்கும் தற்போது தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அவர்கள் நிரந்தர வீடுகளில் குடியேறும் வரை உலர் உணவு மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கும் அனர்த்தத்திற்குள்ளான வீடுகளுக்கான வீட்டுத் தளபாடங்களை கொள்வனவு செய்வதற்கு 250,000/- ரூபா உச்சத்திற்கு உட்பட்டு நிதி உதவி வழங்குவதற்கும் அனர்த்தத்திற்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு சீருடை, பாடசலைப் புத்தகங்கள் உட்பட உபகரணங்களை வழங்குவதற்கும் அனர்த்தத்திற்குள்ளான இந்த பகுதியை ஆபத்து மிக்க வலையமாக வர்த்தமானி மூலம் அறிவிப்பதற்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.