• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டி கொஹாகொட கழிவுப் பொருட்கள் இடப்படும் இடத்தை அண்மித்து கொம்போஸ்ட் உர / மின்சக்தி உற்பத்தி கருத்திட்டம்
- கண்டி கொஹாகொட கழிவுப் பொருட்கள் இடப்படும் இடத்தை அண்மித்து திண்மக் கழிவுகள் மூலம் கொம்போஸ்ட் உரம் மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் பணிகளை ஆரம்பிப்பதற்காக இந்த கருத்திட்ட காணிக்கு அண்மைய பிரதேசத்தில் குடியிருப்போருக்கு நட்டஈடு வழங்கி அப்புறப்படுத்துவதற்கும் இந்த கருத்திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இலங்கை மின்சார சபையினால் திட்டவட்டமான அறவீட்டு முறையின் கீழ் கொள்வனவு செய்வதற்கு உரியதாக உடன்பாடொன்றுக்கு வருவதற்குமாக கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.