• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு மற்றும் அதற்கண்மித்துள்ள பிரதேசங்களில் நகர அலங்காரங்களை முறையாக பேணுவதற்காக செயலணியொன்றையும் செயற்பாட்டு அலுவலகம் ஒன்றையும் தாபித்தல்
- கொழும்பு நகரத்திலும் அதற்கண்மித்த நகரங்களிலும் திண்மக் கழிவுப் பொருட்கள் முறையற்ற விதத்தில் இடப்படுவதனால் உள்ளூராட்சி நிறுவனங்கள் முகம் கொடுத்துள்ள சிக்கல் வாய்ந்த நிலைமை பற்றி கவனத்திற்கு எடுத்துக் கொண்டு திண்மக் கழிவு முகாமைத்துவத்திற்கு நேரடியாக தொடர்புபடும் அரசாங்க நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் கழிவு முகாமைத்துவத்திற்கான செயலணியொன்றையும் செயற்பாட்டு அலுவலகம் ஒன்றையும் தாபிப்பதற்கும் அதற்கு ஒருங்கிணைவாக கழிவு முகாமைத்துவத்திற்கு உரியதாக வழிமுறைகள் மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்தும் வழிமுறைகள் பற்றி பொது மக்களுக்கு அறியச் செய்விப்பதற்குமாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.