• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தேச இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்குரிய கொள்கைகள் மற்றும் சட்டரீதியான கட்டமைப்பு
- 2017 ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சரின் அவதானிப்புரைகள் உட்பட ஏனைய அமைச்சர்களின் கருத்துக்களுடன் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, திருத்தப்பட்டுள்ள உத்தேச இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்குரிய கொள்கைகள் மற்றும் சட்டரீதியான கட்டமைப்பு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இந்த கொள்கைகள் மற்றும் சட்டரீதியான கட்டமைப்பை அங்கீகரிப்பதற்கும் இதனை அடிப்படையாகக் கொண்டு உத்தேச இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை வரைவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.