• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்திலும் கொழும்பு பல்கலைக் கழகத்திலும் நிருமாணிக்கப்படவுள்ள கட்டடங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
- இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் கல்விசாரா பதவியணியினருக்கான உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக நிருமாணிக்கப்பட்டு வரும் 17 மாடிகளைக் கொண்ட கட்டடத் தொகுதியின் மீதி வேலைகளை பூர்த்தி செய்வதற்கும் திறந்த போட்டிகரமான நடவடிக்கைமுறையின் கீழ் ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்வதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தங்களை கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.