• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை ஹதபிம அதிகாரசபையின் விடயநோக்கெல்லையை விஸ்தரித்தலும் நெகிழ்ச்சி மிக்கதாக்குதலும்
- 1972 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க அரசாங்க கமத்தொழில் கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட "கமத்தொழில் பல்வகைப்படுத்துகையும் குடியேற்ற அதிகாரசபையும்" என்பது 1980 ஆம் ஆண்டிலிருந்து "தேசிய கமத்தொழில் பல்வகைப்படுத்துகையும் குடியேற்ற அதிகாரசபையும் (ஹதபிம)” என பெயரிடப்பட்டது. கமத்தொழில் உற்பத்திகளை பதனிடுதல் மற்றும் விற்பனை செய்தல் இந்த அதிகாரசபையின் பிரதான பணிகளாவதோடு, இதற்காக விசேட விற்பனை பிரிவொன்று 2002 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நடாத்திச் செல்லப்பட்டுள்ளது. ஹதபிம அதிகாரசபையின் பணிகளை நெகிழ்ச்சி மிக்கதாக்கும் சாத்தியம் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தி இந்த அதிகாரசபையின் பணிகளை நாடு முழுவதும் வியாபிக்கும் பொருட்டு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.