• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"எல்லங்கா" கிராமிய குளங்கள் முறைமையை மேம்படுத்துதல்
- விஞ்ஞான ரீதியில் ஒன்றாக இணைந்த பொது நீர் வழியொன்றில் அமைந்துள்ள கிராமிய குளங்கள் முறைமையானது "எல்லங்காவ" என அழைக்கப்படுகின்றது. முன்னோர்களினால் நிருமாணிக்கப்பட்ட இந்த நீர்ப்பாசன வடிவமைப்பு முறையானது தற்போது நாம் முகங்கொடுக்கும் காலநிலை மாற்றத்தை வெற்றிக் கொள்வதற்கு மிக பொருத்தமான முறையொன்றாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக நாட்டின் ஒன்பது மாவட்டங்களில் பரந்துள்ள 21 எல்லங்காவ முறைமைகளையும் அதன் கீழுள்ள 258 கிராமிய குளங்களையும் விருத்தி செய்வதற்கான கருத்திட்டமொன்று கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் எதிர்வரும் ஐந்து (5) வருட காலப்பகுதிக்குள் உரிய விவசாய அமைப்புகளின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொண்டு நடைமுறைபடுத்தும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.