• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சருவதேச தொடர்புகள் மற்றும் திறமுறை கற்கைகளுக்கான லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்திற்கும் உலக அலுவல்கள் தொடர்பான நேபாள மன்றத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
- பரஸ்பரம் அக்கறை கொண்டுள்ள துறைகளில் அறிவு, அனுபவம், நிபுணத்துவம் உட்பட தகவல்களின் பரிமாற்றத்தினை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் இலங்கை சருவதேச தொடர்புகள் மற்றும் திறமுறை கற்கைகளுக்கான லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்திற்கும் நேபால் அரசாங்க தலைவரின் தலைமையில் செயற்படும் இலாபம் ஈட்டாத நிறுவனமொன்றான உலக அலுவல்கள் தொடர்பான நேபாள மன்றத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.