• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாத்தறை ரிவர்சைட் பார்க் (பூங்கா) அபிவிருத்தி
- மாத்தறை ரிவர்சைட் பார்க் (பூங்கா) அபிவிருத்தி கருத்திட்டமானது மாத்தறை நகர அபிவிருத்தி திட்டத்தின் முன்னுரிமைக் கருத்திட்டங்களில் ஒன்றாகும். இதன்கீழ் நூலகம், விளையாட்டு மைதானம், நீர் பகுதிகளை அண்டிய வீட்டு அபிவிருத்திப் பணிகள், அலுவலக மற்றும் நிறுவன அபிவிருத்திப் பணிகள், தேசிய விழா நிலையம், படகு நங்கூரமிடல் வசதிகளுடனான களஞ்சியம், விளையாட்டு நடவடிக்கைகள் உட்பட வாகனத் தரிப்பிடங்கள் என்பன தாபிக்கப்படுவதோடு, இதன் முதலாம் கட்டத்தின் கீழ் ஏற்கனவே ஆற்றுக் கரைகளின் அரிப்பினை தடுப்பதற்குரிய பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த கருத்திட்ட பணிகளை தொடர்ந்தும் செய்வதற்கும் இதற்காக ஏற்கனவே சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமைகளை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளிப்பதற்கும் கருத்திட்டத்தைப் பூர்த்தி செய்ததன் பின்னர் அதன் பராமரிப்பு பணிகளை மாத்தறை நகரசபைக்கு கையளிப்பதற்கும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினாலும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.