• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க வைத்தியசாலைகளுக்காக137 புதிய உணர்விழப்பு இயந்திரங்களை கொள்வனவு செய்தல்
- நாடு முழுவதுமுள்ள அரசாங்க வைத்தியசாலைகள் ஊடாக நோயாளிகளுக்கு உயர்மட்ட சுகாதார சேவையை வழங்கும் போது அத்தியாவசியமான 137 உணர்விழப்பு இயந்திரங்களை உரிய வென்டிலேட்டர் உபகரணங்களுடன் வழங்கி, தாபித்து, செயற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசு பிரகாரம் 1.3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு M/s Meditechnolgy Holdings (Pvt) Ltd கம்பனிக்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.