• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் விசேட சிறுவர் மருத்துவ பிரிவொன்றைத் தாபித்தல்
- காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலை இலங்கையின் மூன்றாவது படிநிலையிலான பெரிய வைத்தியசாலை ஆகும். இந்த வைத்தியசாலையில் 60 காவறைகளும் 1,900 படுக்கைகளும் உள்ளதோடு, இதில் நோய்வாய்ப்பட்ட சிறுவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது 250 படுக்கைகளாகும். அதேபோன்று இங்கு சிறுவர் தீவிர நரம்பியல் சிகிச்சைப் பிரிவு, சிறுவர்நோய் தீவிர சிகிச்சைப் பிரிவு, சிறுவர்நோய் அறுவைச் சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றை விருத்தி செய்யவேண்டியுள்ளது. இதற்கமைவாக சகல வசதிகளுடனும் கூடிய சிறுவர் நோய் பிரிவொன்றை கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் தாபிப்பதற்காக கட்டடத்தொகுதியொன்று நிருமாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளைப் பெற்றுக் கொள்வதற்கு உட்பட்டு, மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கும் பொறியியல் சேவைகள் தனியார் கம்பனிக்கும் கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.