• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ருகுணுபுர நீர்வழங்கல் கருத்திட்டத்திற்கான மொத்த செலவு மதிப்பீட்டை மீளமைத்தல்
- 8,653.54 மில்லியன் ரூபாவைக் கொண்ட ருகுணுபுர நீர்வழங்கல் கருத்திட்டத்தின் ஆரம்ப ஒப்பந்தத் தொகையானது, ஒப்பந்தக்காரரின் கட்டுப்பாட்டைவிஞ்சிய காரணங்களின் மீது 10,029.64 மில்லியன் ரூபா வரை மீளமைப்பதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக திறைசேரிச் செயலாளருடன் கலந்துரையாடி உடன்பாடு காணப்பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தத் தொகையை மீளமைத்து இந்தக் கருத்திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.