• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்திய அதிவேக பாதைக் கருத்திட்டத்தின் கடவத்தையிலிருந்து மீரிகமை வரை (கி.மீ 36.59) பகுதியின் வடிவமைப்பு மற்றும் நிருமாணிப்பு மேற்பார்வைக்கான மதியுரைச் சேவைகளை வழங்குதல் தொடர்பான ஒப்பந்தத்தை கையளித்தல்
- மத்திய அதிவேக பாதைக் கருத்திட்டத்தின் கடவத்தையிலிருந்து மீரிகமை வரை முதலாம் பகுதியின் (கி.மீ 36.59) வடிவமைப்பு மற்றும் நிருமாணிப்பு மேற்பார்வைக்கான மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவுக் குழுவின் சிபாரிசுின் பிரகாரம் 2,548.91 மில்லியன் ரூபாவுக்கு Resources Development Consultants (Pvt) Ltd., கம்பனியுடனான Green Tech Consultant (Pvt) Ltd., மற்றும் Consulting Engineers Architects Associated (Pvt) Ltd. ஆகிய கூட்டு தொழில்முயற்சிக்கு கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.