• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆரம்பக் கைத்தொழில் அமைச்சினால் தாய்லாந்தின் கமத்தொழில் மற்றும் கமத்தொழில் கூட்டுறவு வங்கியுடனும் தாய்லாந்தின் கசெத்சாத் பல்கலைக்கழகத்தின் கமத்தொழில் பீடத்துடனும் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
- கமத்தொழில், நுண்பாக நிதி மற்றும் கமத்தொழில் உதவி போன்ற துறைகளில் ஆற்றல் அபிவிருத்தி சம்பந்தமான அனுபவங்களை பரிமாறிக் கொள்வதற்கு ஆரம்ப கைத்தொழில் அமைச்சுக்கும் தாய்லாந்தின் கமத்தொழில் மற்றும் கமத்தொழில் கூட்டுறவு வங்கிக்கும் இடையிலும் பெறுமதிசேர்க்கப்பட்ட கமத்தொழில் உற்பத்திகளை அடிப்படையாகக் கொண்ட ஆரம்பக் கைத்தொழில் சம்பந்தமான தொழினுட்ப ஒத்துழைப்பு சார்பில் ஆரம்ப கைத்தொழில் அமைச்சுக்கும் தாய்லாந்தின் கசெத்சாத் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலும் இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் பொருட்டு ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.