• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
13. அரசகரும மொழிக் கொள்கைக்கு அமைய அரசாங்க / பகுதி அரசாங்க நிறுவனங்களிலும் பொது இடங்களிலும் பெயர்ப் பலகைகளை / சைகைகளை மும்மொழிகளில் தயாரித்தல்
- எந்தவொரு பிரசைக்கும் தனது சேவையின் தேவை நிமித்தம் அரசாங்க நிறுவனமொன்றுக்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் உத்தியோகத்தர்கள் எவரிடமும் வினவாது அவருக்கே தேவையான இடத்திற்கு செல்லக்கூடிய விதத்தில் அலுவலக சூழலை பேணுவதில் மும்மொழி பெயர் பலகைகளும் வழிகாட்டல் சைகளும் மிக முக்கியமானதாகும். அரசககரும மொழிக்கு அமைவாக பிரதான வழிகாட்டல் பெயர் பலகையிலிருந்து சைகை, பிரிவுகளை குறிப்பிடும், உத்தியோகத்தர்கள் பெயர்கள் என்பன அடங்கிய மும்மொழி பலகைகள் பேணப்பட வேண்டுமென்பதோடு, வரவேற்பு கருமபீடங்களின் மூலம் மும்மொழிகளிலும் சேவை வழங்கப்படுவதும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை புறம்பான செலவு விடயமொன்றின் கீழ் அமைச்சுக்கள், திணைக்களங்கள் உட்பட ஏனைய அரசாங்க நிறுவனங்களுக்கு ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும் சில சந்தர்ப்பங்களில் குறித்த கொள்கையானது உரிய வகையில் நடைமுறைப்படுத்தாமை தெரியவந்துள்ளது. இதற்கமைவாக, ஏதேனும் அரசாங்க நிறுவனமொன்றினால் உரிய பெயர் பலகைகளை அரசகரும கொள்கைக்கு அமைவான விதத்தில் காட்சிப்படுத்தாவிட்டால் அதனை செம்மைப்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்களைச் செய்வதற்கும் தேவையாயின் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சுக்கு குறித்தொதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகளின் மூலம் மேலதிக நிதி ஏற்பாடுகளை வழங்குவதற்கும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.