• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான சலுகைக் கடன் திட்டம்
- 2010 ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இயல்பு வாழ்க்கைக்கு வருவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்வதற்காக ஆட்கள், ஆதனங்கள், சொத்துக்கள் புனரமைப்பு அதிகார சபையானது இலங்கை வங்கியின் ஊடாக சலுகை கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த கடன் திட்டத்தின் கீழ் 2016-12-31 ஆம் திகதியன்றுக்கு 5,222 பயனாளிகளுக்கு 770.1 மில்லியன் ரூபா கடனாக வழங்கப்பட்டுள்ளதோடு, இதில் 497 மில்லியன் ரூபா இலங்கை வங்கியினால் அவர்களிடமிருந்து மீள அறிவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறவிடப்பட்ட தொகையானது சுழற்சிக் கடன் திட்டமொன்றாக உரிய குடும்பங்களுக்கு மீண்டும் கடனாக வழங்குவதற்கு பயன்படுத்த முடியுமென இலங்கை வங்கி அறிவித்துள்ளதோடு, இதற்கமைவாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.