• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
20,000 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்யும் கருத்திட்டம்
- உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பால் கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. இதன் கீழ் பாரிய மற்றும் மத்திய அளவிலான வர்த்தக பாற் பண்ணைகளை தாபிப்பதனை ஊக்குவிக்கும் நோக்கில் 20,000 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்யும் கருத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுவதோடு, முதலாவது கறவைப் பசுக்களின் தொகையானது 2017 மே மாதம் 17 ஆம் திகதியளவில் நாட்டிற்கு வந்தடையவுள்ளது, இந்த கருத்திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் உயர்தர கறவைப் பசுக்களை வர்த்தக மட்டத்தில் பாற்பண்ணைகளை நடாத்திச் செல்லும் விவசாயிகளுக்கு சலுகை விலையில் வழங்குவதற்கும் அதற்குத் தேவையான நிதியினை இலங்கை மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படும் சலுகை கடன் திட்டமொன்றின் ஊடாக வழங்கப்படுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்ற நவீன பண்ணைகளை தாபித்தலும் அதன் தொழிற்பாட்டு பணிகள் சம்பந்தமாகவும் விலங்கு உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் ஊடாக பயனாளிகளுக்கு பயிற்சியும் கால்நடை மருத்துவ உதவியும் வழங்கப்படவுள்ளது. தற்போது முதலாம் கட்டத்திற்கான பாற்பண்ணை பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, உரிய பண்ணைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக ஆகக்குறைந்தது பத்து கறவைப் பசுக்களுடன் பயன்பெறும் பண்ணையொன்றின் இரண்டு சமுர்த்தி பயனாளிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் விதத்தில் மேற்போந்த் உத்தேச வழிமுறையின் கீழ் இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.