• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்காக இந்துசமுத்திர வலய அமைப்பின் (Indian Ocean Rim Association) உறுப்பு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- 2016 ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் துபாயில் நடாத்தப்பட்ட இந்து சமுத்திர நாடுகளின் சங்கத்தினது பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர்களின் இரண்டாவது கூட்டத்தில் உறுப்புரிமை நாடுகளுக்கிடையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உறுப்புரிமை நாடுகளின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கிடையே உறவுகளை வளர்த்தல், பொருத்தமான தொழினுட்பம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்திக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்குதல் இந்த உடன்படிக்கையை செய்து கொள்வதன் மூலம் கிடைக்கும் நலன்களாகும். இதற்கமைவாக இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கை சார்பில் கைச்சாத்திடும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.