• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டி சுரங்கப்பாதை நிருமாண கருத்திட்டத்தை அமுல்படுத்துதல்
- கண்டி நகரத்தில் நிலவும் அதிக வாகன நெரிசலை குறைப்பதற்காக தென்னேகும்புற பிரதேசத்தில் இருந்து சுதுகும்பொல பிரதேசம் வரை 4.36 கிலோ மீற்றர் நீளம் கொண்ட சுரங்கப் பாதையொன்றையும் 1.2 கிலோ மீற்றர் நீளம் கொண்ட வீதிப் பகுதியொன்றையும் நான்கு சாலை வரிசைகள் கொண்டதாக நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதோடு, இதற்காக மதிப்பிடப்பட்ட ஆகு செலவு 252.30 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும். இந்த கருத்திட்டத்திற்கு 199.27 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் வசதியை வழங்குவதற்கு கொரியாவின் பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவு நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, கண்டி சுரங்கப்பாதை நிருமாணிப்பு கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கும் உரிய கடன் தொகையின் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி கலந்துரையாடுவதற்கும் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கு அதிகாரத்தைக் கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.