• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட அலுவலகத்திற்காக அரசாங்கத்தினால் ஏற்கப்படும் செலவுகள்
- 1967 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமானது இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாக செயலாற்றி வருகின்றது. இலங்கை அரசாங்கத்தினால் இங்கு கூட்டு தன்னார்வ பங்களிப்புத் தொகையாக வருடாந்தம் 150,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட அலுவலகத்தின் செலவாக சுமார் 39,500 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட பங்களிப்புத் தொகையும் வழங்கப்படுகின்றன. குறைந்த நடுத்தர வருமானம் பெறும் நாடொன்றாகவிருந்த இலங்கை 2014 ஆம் ஆண்டிலிருந்து நடுத்தர வருமானம் பெறும் நாடொன்றாக வகுப்பீடு செய்யப்ட்டுள்ளதன் காரணமாக 2016-12-31 ஆம் திகதியன்றுக்கு 1.182 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிலுவைத் தொகையினை இலங்கை அரசாங்கத்தினால் தீர்க்க வேண்டியுள்ளது. இந்த நிலுவைத் தொகையை மீண்டும் செலுத்துவதற்கு பதிலாக இந்தத் தொகையை பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்தினால் முன்னுரிமை அடிப்படையில் இனங்காணப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் செய்யப்பட்டுள்ள பிரேரிப்பை அமுல்படுத்தும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.